Tuesday, January 31, 2012

உயிரோடு செத்தவர்கள்!



உயிர் இருக்கிறது
உணர்ச்சி இல்லை!
உதடு இருக்கிறது
சிரிப்பு இல்லை!

என்ன இது?
இக்கால இயந்திரமா?
உற்றுப் பார்க்கிறேன்..

அட!
இவர்கள் மனிதர்கள்தான்!

நீங்களெல்லாம்..
உயிரோடு செத்துவிட்டீர்களா?
இல்லை
செத்தபின்னும் உயிர்வாழ்கிறீர்களா?
என்று கேட்கிறேன்..

நாணயங்களின் ஓசையில் என்
நா நயங்களின் ஓசை
இவர்களுக்குக் கேட்கவில்லை!

மீண்டும் கேட்கிறேன்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு சிரிப்பில்தானே தெரியும்..?

எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..

ஒன்றை இழந்தால்தானே
இன்னொன்றைப் பெறமுடியும்!

நாங்கள் சிரிப்பை விதைத்து
பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..


29 மறு மொழிகள்:

  1. //நாங்கள் சிரிப்பை விதைத்து
    பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..//
    அருமை,குணசீலன்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி விக்கி

      Delete
  3. அருமை ஐயா.
    நன்றி.

    ReplyDelete
  4. //நாங்கள் சிரிப்பை விதைத்து
    பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..//

    ஒரே வரியில் உழவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி விட்டீங்க.சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி இராம்வி

      Delete
  5. அருமையான பத்தி ஐயா

    ReplyDelete
  6. இப்படி பல பொம்மைகளை நித்தம் காண முடிகிறது ..
    ஏன் நானே சில நேரங்களில் இப்படி தான் இருந்து வருகிறேன் ..
    கவிதை சுடுகிறது

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி அரசன்

      Delete
  7. உதடு இருக்கிறது
    சிரிப்பு இல்லை!


    எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
    சிரிப்பை அடக்கம் செய்த
    கல்லறைஉதடுகள் திறந்து
    இவர்கள் சொல்கிறார்கள்..

    சிறப்பு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே

      Delete
  8. பணம் தேடும் வாழ்க்கையில் நாம் தொலைத்தவை எவ்வளவோ. அதில் சிரிப்பும் ஒன்று. நானும் இவ்வித மனிதர்களை சந்தித்திருக்கிறேன். கொஞ்சமேனும் சிரிக்கத் தெரியாத இவர்கள் வாழ்ந்துதான் என்ன ஆக வேண்டி கிடக்கிறது? அருமையான பதிவு சார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டேனியல்.

      Delete
  9. சிரிப்பை தொலைத்து
    சில்லறையை தேடும்
    முகங்கள் பெருகிக் கொண்டே
    தான் இருக்கின்றன முனைவரே...
    அழகுக் கவிதை படைத்தீர்கள்...
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்

      Delete
  10. சிரிப்பு என்னும் அற்புத உணர்வு வெளிப்பாட்டை அடியோடு மறந்துவிட்டவர்களைச் சாடாமல் சாடியவிதம் வெகுநன்று. போகும் போக்கில் சிறு புன்னகையும் சிந்த மறந்தவர்களின் இறுகிய முகங்களைப் பார்க்கும்போது நமக்குள்ளும் இறுக்கம் தொற்றிக்கொள்வது உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி கீதா.

      Delete
  11. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தது ! பகிர்வுக்கு நன்றி Sir !

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  12. குண சீலன் உங்களை நினைகையில் பெருமை எனக்கு தமிழ் படித்தோர் எல்லாம் தமிழன் என்று சொல்லிவிட முடியாது தமிழன் பெருமையை உணர்த்துபவன் மட்டுமே உண்மை தமிழன் வளர்க உங்கள் தமிழ் பணி

    ReplyDelete
    Replies
    1. வேர்களைத்தேடி வந்தமைக்கு நன்றிகள்

      Delete
  13. உணர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குணா !

    ReplyDelete
  14. மனிதன் இக்கால இயந்திரம்..... நல்ல வருணனை.... இக்கால மனித இயல்புகளை வேதனையுடன் எடுத்தியம்பிய விதம் மிக அருமையாய் இருந்தது..... நன்றி.....

    ReplyDelete

இலக்கியத் திரட்டி

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (131) அன்றும் இன்றும் (40) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (55) இயற்கை (23) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (65) எதிர்பாராத பதில்கள் (14) ஐங்குறுநூறு (2) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (2) கதை (21) கருத்தரங்க அறிவிப்பு (8) கலித்தொகை (11) கலீல் கிப்ரான். (8) கலை (5) கவிதை (30) காசியானந்தன் நறுக்குகள் (15) காணொளி (9) கால நிர்வாகம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (38) குறுந்தொகை (71) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (20) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (17) சங்க இலக்கியத்தில் உவமை (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (26) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (10) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (15) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (2) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (18) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (9) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (3) சிந்தனைகள் (129) சிறப்பு இடுகை (6) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (1) தமிழர் பண்பாடு (11) தமிழாய்வுக் கட்டுரைகள் (14) தமிழின் சிறப்பு (22) தமிழ் அறிஞர்கள் (5) தமிழ்ச்சொல் அறிவோம் (6) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (5) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (21) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (3) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (92) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (45) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (5) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (11) புறநானூறு (68) புவிவெப்பமயமாதல் (5) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) மனதில் நின்ற நினைவுகள் (18) மனிதம் (2) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (6) மாணாக்கர் நகைச்சுவை (26) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (2) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (39) வேடிக்கை மனிதர்கள் (68) வைரமுத்து (5)