Monday, January 9, 2012

ஏமாந்த நிலம்!



நிலத்தை
மனிதன் வாங்குவதாகச் சொல்கிறான்
நிலம் தான் மனிதனை வாங்குகிறது

நிலத்தை வாங்கும்போது
மனிதன் ஏமாறுவதுபோல
மனிதனை வாங்கும்போது
சிலநேரம் நிலமும் 
ஏமாந்துபோகிறது!
புகழ்பெற்று வாழ்வாங்கு வாழந்தவரைச்
சுமக்கும் நிலம் பெருமிதம் கொள்கிறது
அதன் முகம் பசுமை ஒளிவீசுகிறது!

புகழின்றி பத்தோடு பதினொன்றாய்
வாழ்ந்துதொலைத்தவரை வாங்கிய நிலம்
அழுது புலம்புகிறது.
அதன் முகம் வறட்சியாகவே உள்ளது.



வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்

திருக்குறள் - 239

தொடர்புடைய இடுகை

16 மறு மொழிகள்:

  1. சிலநேரம் நிலமும்
    ஏமாந்துபோகிறது!

    உண்மை தோழரே..
    வாசித்தேன்..வாக்கிட்டேன்..

    சந்தேகம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே

      Delete
  2. அருமையான விளக்கம். தம்மை அகழ்வாரைத் தாங்கும் நிலமும் புகழில்லாரைத் தம்முள் தாங்கவியலாது விளையா நிலையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி கீதா

      Delete
  3. உன்னைச் சுமந்து என்ன பயன்
    ஊதாரியாய் திரிந்துவிட்டு மீண்டும் என் கருவறை புகுந்து
    என்னை நீரற்றுப் போகச் செய்துவிட்டாயே...

    சோம்பித் திரிந்து இறுதியில் யாருக்கும் பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து இடுகாடு செல்கையில் அவனை ஏற்க மறுக்கும் பூமித்தாயின் புலம்பல்.

    அருமை அருமை
    அருமையான படைப்பு முனைவரே.

    ReplyDelete
    Replies
    1. அழகாகச் சொன்னீர்கள் நண்பரே நன்றி

      Delete
  4. அருமையான விளக்கம்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவரே

      Delete
  5. //நிலத்தை
    மனிதன் வாங்குவதாகச் சொல்கிறான்
    நிலம் தான் மனிதனை வாங்குகிறது//

    மிக அருமையான வரிகள்.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராம்வி

      Delete
  6. கவிதை வரிகளுக்குப் பிறகு உற்று யோசிக்கிறேன்.நிலம்தான் எம்மை வாங்குகிறது.சரியான உண்மை !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி ஹேமா

      Delete

இலக்கியத் திரட்டி

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (131) அன்றும் இன்றும் (40) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (55) இயற்கை (23) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (65) எதிர்பாராத பதில்கள் (14) ஐங்குறுநூறு (2) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (2) கதை (21) கருத்தரங்க அறிவிப்பு (8) கலித்தொகை (11) கலீல் கிப்ரான். (8) கலை (5) கவிதை (30) காசியானந்தன் நறுக்குகள் (15) காணொளி (9) கால நிர்வாகம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (38) குறுந்தொகை (71) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (20) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (17) சங்க இலக்கியத்தில் உவமை (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (26) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (10) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (15) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (2) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (18) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (9) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (3) சிந்தனைகள் (129) சிறப்பு இடுகை (6) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (1) தமிழர் பண்பாடு (11) தமிழாய்வுக் கட்டுரைகள் (14) தமிழின் சிறப்பு (22) தமிழ் அறிஞர்கள் (5) தமிழ்ச்சொல் அறிவோம் (6) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (5) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (21) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (3) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (92) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (45) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (5) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (11) புறநானூறு (68) புவிவெப்பமயமாதல் (5) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) மனதில் நின்ற நினைவுகள் (18) மனிதம் (2) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (6) மாணாக்கர் நகைச்சுவை (26) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (2) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (39) வேடிக்கை மனிதர்கள் (68) வைரமுத்து (5)