என் வாழ்வின்..
மகிழ்ச்சியான நேரங்கள் நான் பாடம் எடுக்கும் நேரங்கள்.
வகுப்பிற்குள் சென்றுவிட்டால் நானும் மாணவரானது போன்ற உணர்வு வந்துவிடும். அப்படி மகிழ்ச்சியாக பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது..
ஒருநாள், எடுத்துக்காட்டுக்காக..
முயலைப் பிடித்துவந்தவன் தான் ஐயா என்று பலரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்..
திகைப்படைந்த நானோ..
ஏனப்பா அப்படியொரு முடிவை எடுத்தீர்கள் என்றேன்..
அதில் ஒரு மாணவன் எழுந்து..
ஐயா..
இரண்டாமவன் வெறுங்கையுடன் வந்தான்.
முதலாமவனோ ஏதோ வேட்டையாடிவந்தான்.
“கிடைத்ததைக் கொண்டு சிறப்புடன் வாழ்” என்று சொல்வார்களே. அதுபோல முதலாமவன் தான் எங்களுக்குச் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறான் ஐயா என்றார்.
பிறகு...
நான், தம்பி..
நீ சொல்வதும் சரிதான்.
ஆனால் வள்ளுவர் பார்வையில்
ஆன்றோர், சான்றோர் பார்வையில்,
அனுபவசாலிகளின் பார்வையில் இரண்டாமவன் தானப்பா சிறந்தவன்.
இரண்டாமனின் இலக்கு மிகவும் பெரிதாக இருக்கிறது பார்த்தீர்களா?
இலக்கின்றி இருப்பதா வாழ்க்கை?
இலக்கு நோக்கிய பயணம் தானே சிறந்தது?
என்று பல்வேறு விளக்கங்கள் சொன்னேன்.
இருந்தாலும் அந்த மாணவர்கள் மனதில் நான் சொன்ன விளக்கங்கள் தேர்வுக்காக எழுதும் பதில்களாகவே அமையும் என்று என் மனம் சொன்னது.
என்றாலும் நான் புரியவைக்கமுடியாத விளக்கத்தை காலம் இவர்களுக்குப் புரியவைக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.
பாடம் சொல்லிக்கொடுக்கச் சென்று நான் அன்று கற்ற பாடங்கள்.
1.திருவள்ளுவரின் பேச்சு இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை.
2.இலக்கியங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதைவிட மதிப்பெண்களுக்காகவே அதிகம் பயன்படுகின்றன.
3.புரிதல் என்பது புத்தங்களால், ஆசிரியரால் மட்டும் ஏற்பட்டுவிடுவதில்லை.

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது
திருக்குறள்-772
என்ற குறளைச் சொல்லி, இதன் பொருள் என்ன என்று கேட்டேன்.
ஒரு மாணவன் - ஐயா இது திருக்குறளா? என்றான்.
ஒருவன் - ஐயா இதை நான் பேருந்தில் பார்த்திருக்கிறேன் என்றான்.
இன்னொரு மாணவன் - இதன் பொருளை சாலமன் பாப்பையாவிடம்தான் கேட்கவேண்டும் என்றான்.
இன்னொரு மாணவன் - எதுக்குங்கய்யா வம்பு!
நீங்களே சொல்லீடு்ங்களேன் என்றான்.
சரி பாவம் ஆங்கில வழியே படித்துவரும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் வேற்றுமொழிதான். அப்படியிருக்கும்போது திருக்குறள் எப்படி அவர்களுக்குத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு நானே விளக்கம் சொன்னேன..
தம்பி...
இருவர் வேட்டைக்குப் போறாங்கப்பா..
அதில் ஒருவர் போனவுடன் எதிரே ஓடிய முயலை தன் அம்பால் வீழ்த்தி தோளில் போட்டுக்கொண்டு வெற்றிக் களிப்புடன் அம்பேந்தி வருகிறார்.
இன்னொருவர் யானையைத்தான் வேட்டையாடவேண்டும் என்று திட்டமிட்டு்ச சென்றார். யானையையும் நோக்கி அம்பெய்தார். ஆனால் யானை தப்பி ஓடிவிட்டது. அதனால் பிழைத்த தன் அம்பினை ஏந்தி வருகிறார்.
இதுதானப்பா வள்ளுவர் சொல்லும் குறளின் பொருள் என்றேன்.
எத்தனைபேருக்குப் புரிந்தது என்று தெரிந்துகொள்வோம் என்ற எண்ணத்தில்...
அன்பு மாணவர்களே... நான் சொன்ன இந்த வள்ளுவர் கதையில் இருவர் வருகிறார்கள்...
இருவரில் உங்களுக்கு யாரைப் பிடித்தது?
யாரை நாம் வாழ்க்கை மாதிரியாகக் கொள்ள வேண்டும்?
என்று கேட்டேன்
முயலைப் பிடித்துவந்தவன் தான் ஐயா என்று பலரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்..
திகைப்படைந்த நானோ..
ஏனப்பா அப்படியொரு முடிவை எடுத்தீர்கள் என்றேன்..
அதில் ஒரு மாணவன் எழுந்து..
ஐயா..
இரண்டாமவன் வெறுங்கையுடன் வந்தான்.
முதலாமவனோ ஏதோ வேட்டையாடிவந்தான்.
“கிடைத்ததைக் கொண்டு சிறப்புடன் வாழ்” என்று சொல்வார்களே. அதுபோல முதலாமவன் தான் எங்களுக்குச் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறான் ஐயா என்றார்.
பிறகு...
நான், தம்பி..
நீ சொல்வதும் சரிதான்.
ஆனால் வள்ளுவர் பார்வையில்
ஆன்றோர், சான்றோர் பார்வையில்,
அனுபவசாலிகளின் பார்வையில் இரண்டாமவன் தானப்பா சிறந்தவன்.
இரண்டாமனின் இலக்கு மிகவும் பெரிதாக இருக்கிறது பார்த்தீர்களா?
இலக்கின்றி இருப்பதா வாழ்க்கை?
இலக்கு நோக்கிய பயணம் தானே சிறந்தது?
என்று பல்வேறு விளக்கங்கள் சொன்னேன்.
இருந்தாலும் அந்த மாணவர்கள் மனதில் நான் சொன்ன விளக்கங்கள் தேர்வுக்காக எழுதும் பதில்களாகவே அமையும் என்று என் மனம் சொன்னது.
என்றாலும் நான் புரியவைக்கமுடியாத விளக்கத்தை காலம் இவர்களுக்குப் புரியவைக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.
பாடம் சொல்லிக்கொடுக்கச் சென்று நான் அன்று கற்ற பாடங்கள்.
1.திருவள்ளுவரின் பேச்சு இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை.
2.இலக்கியங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதைவிட மதிப்பெண்களுக்காகவே அதிகம் பயன்படுகின்றன.
3.புரிதல் என்பது புத்தங்களால், ஆசிரியரால் மட்டும் ஏற்பட்டுவிடுவதில்லை.
தொடர்புடைய இடுகைகள்