வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 1 அக்டோபர், 2011

முதியோர்தின (சிறப்பு இடுகை)



முதுமை ஒரு வரம்
அது எல்லோருக்கும் வாய்க்காது!

“வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் அந்தவாய்ப்பு
எல்லோருக்கும் கிடைப்பதில்லை“
என்றொரு பொன்மொழி இருக்கிறது.

கருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..
நாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..?
சரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா?
நாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமா?என்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் 
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி 
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

குண்டலகேசி -9

உறங்குவது போன்றது இறப்பு
உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..
இதனை,
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
என்ற குறள் விளக்கும்.


பிறப்புக்கும் இறப்பும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையில் இளமை என்பதும் முதுமை என்பதும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை!

மனிதக் காட்சிசாலை!

“விலங்குகள் வந்து
இங்கே மனிதர்களைப் பார்த்துசெல்லும்
இதன் பெயர்
முதியோர் இல்லம்!“

என்னும் கவிதை முதியோர்களுக்கு மனிதவிலங்குகள் தரும் மதிப்பை அடையாளம் காட்டுவதாக அமைகிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமையடைந்த பெற்றோர்களை நாளும் நாளும் தெருவில் காணமுடிகிறது.
இது ஒருவகை என்றால்...

இன்னும் நாகரீகமாக பெற்றோருக்கு கடமையாற்றுகிறேன் என்ற பெயரில் “முதியோர் இல்லத்தில்“ சேர்க்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உயிரற்ற சிலைகளை வணங்குவதைவிட பெற்றெடுத்த உறவுகளை வணங்குவதல்லவா உண்மையான வழிபாடு!

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


என்ற வள்ளுவரின் வழிகாட்டலின்படி ஒவ்வொரு மகன்களும் தம் பெற்றோர்களை நல்லபடி பார்த்துக்கொண்டாலே முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது என் கருத்து.
  
முதுமை என்பது இரண்டாம் குழந்தைப் பருவம் என்கின்றன இலக்கியங்கள்..

குழந்தைகளையே பார்த்துக்கொள்ளமுடியாத இயந்திர மனிதர்களிடம்...
வளர்ந்த குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது அறியாமையுடைய அறிவுரையாகத்தான் எனக்கே தோன்றுகிறது..

இருந்தாலும்... சொல்வது நம் கடமையல்லவா...
சொல்லிவைப்போம்..

முதியோர் தினம் கொண்டாடுவதைவிட
முதியோர்களைக் கொண்டாடவேண்டும் என்று நினைப்பவன் நான்..

இருந்தாலும் முதுமை என்னும் விருதுபெற்ற சாதனையாளர்களுக்கு வாழ்த்துச் சொல்லவிரும்புகிறேன்..

அன்புநிறைந்த வாழ்த்துக்கள் முதியோர்களே!!

இந்த நன்னாளில் முதியோர்கள் உங்களுக்கான சிறப்பு இடுகைகள்..


என்னும் இரு இடுகைகளையும் வழங்கி மகிழ்கிறேன்.

44 கருத்துகள்:

  1. ஏ நான் தான் first.முதலில் படிப்பு அப்புறம் கருத்து

    பதிலளிநீக்கு
  2. எனது முதியோர் தின வாழ்த்துகள்.

    பாடல்களும் கருத்துகளும் அருமை

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும், முதியோர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. பல முதியவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கின்றேன். பல முறை எதிர்கால என் வாழ்க்கையை நினைத்து கவனமாக இருக்க வேண்டும் என்று என்னை ஆறுதல் படுத்தியும் இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  5. ~*~விலங்குகள் வந்து
    இங்கே மனிதர்களைப் பார்த்துசெல்லும்
    இதன் பெயர்
    முதியோர் இல்லம்!~*~

    மனிதனுக்கு இக்கவிதை ஒரு சூடு

    பதிலளிநீக்கு
  6. பதிவு மிக அருமை நண்பரே...

    எனது முதியோர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. மனிதக்காட்சி சாலை.

    பளார்! விலங்குகளுக்கு...

    பதிலளிநீக்கு
  8. முதியோரை என்றும் மதித்து வணங்குவோம்.. நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. ஒரு முதிய உள்ளத்தில்
    இருந்து உங்களுக்கு வாழ்த்துகள் வருகிறது. நன்றி நண்பரே.
    எங்களுக்கு உடல்களை விட உள்ளங்கள் தான் சில சமயம் காயப்படுத்தப் படுகிறது.
    அது மட்டும் இல்லையென்றால்

    வாழ்வு சிறக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நாமும் முதியவர் ஆவோம் என்று நம்ப மறுக்கிறான் மனிதன்... இது நேர்மறை எண்ணமா? எதிர்மறை எண்ணமா? என் மேலாளர் தான் பதில் கூற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  11. பதிவும், பகிர்வும் அருமை.மனிதர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பதிவும், பகிர்வும் அருமை.மனிதர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. முதுமை ஒரு வரம்
    அது எல்லோருக்கும் வாய்க்காது!

    மிகவும் அருமையான பதிவு. நான் எனக்கு வயதாகிவிட்டதாக எண்ணுவதே இல்லை.உங்ககூடல்லாம் பேசும்போது நானும் சின்னவயதுக்குள் போய்விடுகிரேன்.

    பதிலளிநீக்கு
  14. ”இளமையும் வாலிபமும் மாயையே!” இந்த வாசகம் எங்கோ படித்தது ....என்றும் நினைவில் வருவது...

    பதிலளிநீக்கு
  15. அவசியமான பதிவு நண்பா! முதியோர்கள் பற்றிய நல்கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் அல்லது கைவிடுபவர்கள் ஏனோ தங்களுக்கும் வயதாகும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி மறப்பது நன்றன்றே!

    முதியோரின் தியாகமும் அர்பணிப்பும் நம் வளர்ச்சியின் காரணிகள் என்பதை மறக்கக் கூடாது!

    பதிலளிநீக்கு
  17. அருமையான படைப்பு .முதியோர் தின
    வாழ்த்துக்கள் இது அனைத்து முதியோரையும்
    சென்றடையட்டும் மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  18. முதியோர் கண்டிப்பாக குழந்தைக்கு சமமானவர்கள்..
    அவர்களை போற்ற வேண்டும்
    அவர்கள் வாழ்க்கையின் உதாரணங்கள்...

    இலக்கியத்தை மேற்காட்டி தாங்கள் இடும் அனைத்து பதிவுகளும் அழகு...

    இன்றும் அதே போல்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. //////
    விலங்குகள் வந்து
    இங்கே மனிதர்களைப் பார்த்துசெல்லும்
    இதன் பெயர்
    முதியோர் இல்லம்!“
    //////

    உண்மைதான் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் கண்டிப்பாக விலங்குகள்தான்..

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் சுயதேடலுக்கும் நன்றிகள் ஜோதிஜி

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி இராஜா.

    பதிலளிநீக்கு
  23. மனம் மிகவும் நிறைவாக இருக்கிறது வல்லி..
    தங்கள் ஏற்புக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. நேர்மறையென எண்ணும் எதிர்மறை எண்ணமல்லவா சூர்யஜீவா..

    சிந்தனைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  25. தங்கள் மனநிலை எங்களையும் அனுபவசாலிகளாக எப்படி வாழவேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக இருக்கிறது இலட்சுமி அம்மா..

    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  26. உண்மைதான் அப்துல்..
    உணர வேண்டிய நேரங்கள் இவை..

    பதிலளிநீக்கு
  27. தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் சௌந்தர்..

    பதிலளிநீக்கு
  28. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com

    பதிலளிநீக்கு
  29. வணக்கம். உங்கள் வலைதளம் அருமை. நல்ல பல செய்திகள் சொல்லி வருகிறீர்கள். எனக்குப் பிடித்தமான உங்களின் இப்பதிவையும் இன்னொன்றையும் வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  30. தமிழ் கவி
    காலத்தின் நீதி இதுவே
    முதியோர் இல்லம் பற்றிய

    இந்த மனிதக் காட்சி சாலையே
    பார்ப்பதற்கு

    இந்த மனிதக் காட்சி சாலையே
    பார்ப்பதற்கு

    சில பால்குடித்த மிருகங்கள் வந்துவிட்டு
    போகும்

    ஏன் என்றால் நாம் வாழ்வது மிஷ்ரா பிரபஞ்சம்

    அரக்கர்கள் இனம் அழிந்து விட்டதே
    தவிர

    அவர்கள் வித்திட்ட குணங்கள் இன்றுவரை அழிய வில்லை நன்றி....


    பதிலளிநீக்கு