வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சிரிப்பும் சிந்தனையும்.





v துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!
சிரிப்பனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,

துன்பத்திலும் சிரிப்பனிடம் தோல்வி இருக்காது!!

v நண்பா உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே!
அந்தத் துன்பத்திடம் சொல் என் நண்பன் இருக்கிறான் என்று!

v கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.

v அறிவாளி ஒருவன் தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!

முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான்!

v காது கேளாதோர் கவிதை.
எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!

v பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்யுங்கள்!

v இயற்கை, காலம், பொறுமை ஆகியற்றைவிட சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை.

v எல்லோருமே தவறு செய்பவர்கள் தான் ஆனால்
முட்டாள்கள் மட்டுமே அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!


பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.


v கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
v உணவை, ஆனால் பசியை அல்ல.
v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.

12 கருத்துகள்:

  1. கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.

    ..........நல்ல தொகுப்பு, சார். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.

    v கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
    v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
    v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
    v உணவை, ஆனால் பசியை அல்ல.
    v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
    v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
    v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
    v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
    v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
    v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.//

    இது மிகவும் அருமை நண்பா.. முழு பதிவும் முத்தாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  3. அருமை

    பகிர்வுக்கு நன்றிங்க‌

    பதிலளிநீக்கு
  4. குணா சார் உங்களை கிரிக்கெட் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் .
    கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்

    கிரிக்கெட் - தொடர் பதிவு...
    http://saidapet2009.blogspot.com/2010/02/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொன்றும் அருமை .
    அதிலும் என்னை மிகவும் கவர்ந்தது இந்த வாசகம்

    {{{{{{{{{{{ முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான் }}}}}}}}}}}}}

    பதிலளிநீக்கு
  6. \\எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
    எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்\\

    நிதர்சனமான உண்மை நண்பரே

    பதிலளிநீக்கு
  7. நல்லா வந்துஇருக்கிறது கட்டுரை. பத்து விலக்கம் நல்ல விளக்கம்/அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நல்லக் கருத்துக்கள் குணா....

    பதிலளிநீக்கு
  9. அட, ஆமாம், சரிதான் என்று சொல்ல வைக்கிறது அனைத்தும்.

    பதிலளிநீக்கு