வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 ஏப்ரல், 2009

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை

மானம் என்றால் என்ன என்று பல மாக்களுக்குத் தெரியவில்லை.அத்தகைய மாக்களை நம் வாழ்க்கையில் பல சூழல்களில் காண்கிறோம். அம்மாக்களைக் காணும் போது இப்பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
(புறநானூறு -204)
இது சங்க கால மரபு
பிச்சை கேட்பது இழிவானது.அவ்வாறு கேட்பவர்க்கு இல்லை என்று கூறுவது அதைவிட இழிவானது. ஒருவரிடம் பொருளை கொள் எனக் கொடுத்தல் உயர்வானது.அவ்வாறு கொடுப்பவரிடம் கொள்ளேன் எனக் கூறுவது அதைவிட உயர்வானது.என்பது இவ்வடிகளின் பொருளாகும்.

பிச்சை எடுத்தலைவிட இழிவான செயல் ஒன்று உலகத்தில் உள்ளதா?
உள்ளது என்கிறார் ஔவையார்,

(மானமே உயிரினும் சிறந்தது)

14. பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

என உரைக்கிறார்.

பிச்சை எடுத்து உடல் வளர்ப்பதே இழிவானது.அதைவிட இழிவானது ஒருவரைப் புகழ்ந்து அவர்களின் கீழ் நெருங்கி வாங்கி உண்டு வயிறு வளர்ப்பதாகும். சிச்சீ-சீ சீ இப்படி வயிறு வளர்ப்பதை விட உயிரை விடுதல் மிகவும் மேலானது என்கிறார்.

6 கருத்துகள்:

  1. நன்றி. தமிழ் அறிஞர்களது படக்கோர்வையும் அருமை. வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. வீண்புகழ்ச்சியால் யாசித்து உண்ணும்
    பழக்கம் நரவல் உண்பதற்கு சமம்.



    அற்புதமான விளக்கக் கட்டுரை முனைவரே.

    பதிலளிநீக்கு
  3. Neenga T.CODE thana.. i was there in sanakri for 21 years... !!!! ksr !!!!!!

    பதிலளிநீக்கு
  4. சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம்
    கல்லல் என்னும் கிராமம் குணா..

    பணி நிமித்தம் இங்கு கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டுகளாக உள்ளேன்..

    ஈரோட்டில் தான் வசிக்கிறேன்.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு